மீண்டும் பகிர் சம்பவம்.. கை, கால்களை வெட்டிடுவேன்.. பெண் வட்டாட்சியரை மிரட்டிய விசிக மாவட்ட செயலாளர்.!!
VCK district secretary threatened the female tahsildar
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அ.வாசதேவனூரில் அனுமதியின்றி விசிகவினர் கொடிகம்பம் நட்டுள்ளனர். அதனை அகற்றுமாறு வட்டாட்சியர் இந்திரா உத்தரவிட்டிருந்தார். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் தனபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கொடிக்கம்பத்தை அகற்ற மறுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டாட்சியர் இந்திரா காவல்துறையினர் உதவியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை அகற்ற முயன்றுள்ளார்.

இதனால் ஆத்தரமடைந்த விசிக மாவட்டச் செயலாளர் தனபால் "உனக்கு என்ன மரியாதை சொல்லு. உனக்கு எதுக்கு நான் மரியாதை தரணும். நீ பேசுவதற்கு நாங்க ஆளு கிடையாது. நீ முதலில் வெளியே போ. மேஜிஸ்திரேட் என்றால் என்ன. கொடி கம்பத்தில் யாராவது கை வைத்தால் எவனா இருந்தாலும் கை, கால்களை வெட்டுவேன். போய் புகார் கொடு போ" என்று ஒருமையிலும் தகாத வார்த்தைகளாலும் திட்டினார்.

இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அருகில் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளரை தடுக்கவில்லை. பெண் வட்டாட்சியரை விசிக மாவட்டச் செயலாளர் பகிரங்கமாக மிரட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் இந்திரா மிரட்டல் விடுத்த விசிக மாவட்ட செயலாளர் தனபால் மீது சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து விசிக மாவட்ட செயலாளர் தனபால் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அனுமதி இன்றி வைக்கப்பட்ட விசிக கொடி கம்பத்தை இரவோடு இரவாக காவல் துறையினர் அகற்றியுள்ளனர். ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் காவல்துறையினர் முன்னிலையில் பெண் வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் விசிக மாவட்ட செயலாளர் பேசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
English Summary
VCK district secretary threatened the female tahsildar