நாயுடு பெயரை தூக்கு.. மினி மஹால் ஓனரை மிரட்டிய "விசிக பிரமுகர்".. காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிபேட்டை பகுதியில் D.R நாயுடு மினி மஹால் அமைந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த திருமண மண்டபத்தில் பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தம்பிபேட்டை பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுக இளையமாறன் என்பவர் D.R நாயுடு மினி மஹால் திருமண மண்டபத்தின் உரிமையாளர் ராமலிங்கத்தை செல்போனில் தொடர்பு கொண்டார்.

ஆரம்பத்தில் சைலன்டாக பேச ஆரம்பித்த இளையமாறன் D.R என்ற எழுத்து சரிதான் ஆனால் நாயுடு என்ற வார்த்தையை மட்டும் எடுத்து விடுங்கள் என கூறியுள்ளார். அதற்கு மண்டபத்தின் உரிமையாளர் ராமலிங்கம் முதலீடு செய்து மண்டபம் கட்டியது நான்தான் அதில் உனக்கு என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு விசிக பிரமுகர் இளையமாறன் உங்கள் மண்டபத்திற்கு நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் வருகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு மண்டபத்தின் உரிமையாளர் செட்டியார் மண்டபம், ரெட்டியார் மண்டபம் உள்ளதே அங்கு எல்லாம் கேட்க வேண்டியதுதானே என ராமலிங்கம் விடாமல் வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு விசிக பிரமுகர் எங்கள் ஊரில் உள்ளதை மட்டும் தான் எங்களால் கேட்க முடியும் நாயுடு என்ற வார்த்தையை நீக்க ஒரு வாரம் தான் அவகாசம் என கெடு விதித்தார். 

மேலும் இந்த மண்டபத்திற்கு நாயுடு சமூகத்தினர் மட்டும்தான் வரவேண்டும் என்று பேனர் வைப்போம் என மிரட்டல் பிடித்ததோடு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மண்டப உரிமையாளருடன் பேசிய ஆடியோவை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட விசிக பிரமுகர் இளையமாறன் போராட்டத்திற்கு வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக D.R நாயுடு மினி மஹால் உரிமையாளர் ராமலிங்கம் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இந்த புகாரை பெற்றுக் கொண்ட குறிஞ்சிப்பாடி காவல் நிலைய போலீசார் சாதி பெயர் தொடர்பான வழக்கு என்பதால் சுமூகமாக முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விசிக பிரமுகர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK cadre threatens marriage hall owner to remove Naidu name


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->