சேலம்: 107 வயது மூதாட்டி மரணம்! சோகத்தில் மூழ்கிய வாழப்பாடி!
vazhapadi 107 old lady death
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, 107 வயது வரை தானே சமைத்து உண்டு, தன் தேவைகளை தானே செய்து வந்த மூதாட்டி, உடல்நலக் குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த உமையாள்புரத்தாள் (எ) பொட்டியம்மாள் (108) ஒருவர். இவர் மாரிமுத்து கவுண்டரின் மனைவியும், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய திமுக தலைவர் பழனிமுத்துவின் தாயாரும் ஆவார்.
சிறுவயதிலிருந்தே கடின உழைப்பில் ஈடுபட்ட இவர், இயற்கையாக விளைந்த காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்களைத் தானே சமைத்து உண்டு வாழ்ந்தார். நூறு வயதை எட்டிய பின்னரும் கிணற்றில் குதித்து நீந்தி குளித்தவர்.
107 வயதைத் தாண்டிய இவர், வாழ்நாளில் பெருமளவில் ஆங்கில மருந்துகள் எடுத்ததில்லை. ரவிக்கை மேலாடை அணிந்ததில்லை. இயற்கை வைத்திய முறைகளையே கடைபிடித்தார். அண்மையில் தவறி விழுந்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, ஆகஸ்ட் 14 இரவு உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி கிராம மக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
English Summary
vazhapadi 107 old lady death