அரசு விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..முதியவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை!
Government hostel girls face sexual harassmentelderly man sentenced to 35 years in prison
அரசு விடுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த முதியவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சமீப காலமாக தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையானது அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலில் தொந்தரவு கொடுப்பது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதில் சில ஆசிரியர்கள் செய்யும் தவறுகளால் அனைத்து ஆசிரிய பெருமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்கள் போக்சர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அது மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல இடங்களிலும் வேலை செய்யும் நிறுவனங்கள் பள்ளி கல்லூரி போன்ற இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலில் வன்கொடுமை என்பது அதிகரித்து தான் உள்ளது .காவல்துறை என்ன தான் கட்டுப்படுத்த அதனை தடுத்தாலும் ஒரு சில ஆண்களால் ஒரு சில பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சொல்ல போனால் சிறுமிகளுக்கான பாலில் தொந்தரவானது ஒரு கொடுமையான செயலாகவே உள்ளது. இந்த நிலையில்அரசு விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் பகுதியை சேர்ந்த கோட்டீஸ்வரி 2018 ஆம் ஆண்டு அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் சிறுவர் காப்பகத்தில் அவர் சமையல் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், காப்பகத்தில் உள்ள சிறுமிகளை கோட்டீஸ்வரி தனது வீட்டு வேலைக்கு உபயோகப்படுத்தி வந்துள்ளார் . அப்போது வீட்டுக்கு வரும் சிறுமிகளுக்கு கோட்டீஸ்வரியின் கணவர் வெங்கடேசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது தொடர்பாக,விடுதி காப்பாளர் , சிறுமிகளை அழைத்து சென்று வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, கோட்டீஸ்வரி மற்றும் அவரது கணவர் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர்.2018ம் ஆண்டில் பதிவான இந்த வழக்கில் வெங்கடேசனுக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின்போதே கோட்டீஸ்வரி உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Government hostel girls face sexual harassmentelderly man sentenced to 35 years in prison