கேக்கில் புஸ்வானம் விடும் மயிலை இனிப்பகம்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஐயங்கார் பேக்கரியில் குழந்தைகளைக் கவரும் முயற்சியாக பட்டாசு மற்றும் வாண வேடிக்கை உள்ளிட்ட மாதிரிகளில் கேக் மற்றும் இனிப்புகளை உருவாக்கி வைத்துள்ளனர். 

அதாவது, இனிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மெகா சைஸ் சங்கு சக்கரம், அணுகுண்டு மில்க் ஸ்வீட், கேக் கொண்டு செய்யப்பட்ட புஸ்வானம், ராக்கெட் போன்ற இனிப்புகளை செய்துள்ளனர். இவற்றை கடைக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், குழந்தைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஓமம் கலந்த குச்சி பிஸ்கட், பட்டர் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட் மற்றும் எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய் என்று நூற்றுக்கணக்கான இனிப்புகள், மிட்டாய் ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. 

மிகவும் இயற்கையான முறையில் தயார் செய்யபட்டு, வீட்டிற்குத் தேவையான அளவு இனிப்பு மற்றும் பலகார வகைகள் தங்களுக்குக் கிடைப்பதாலும், நேரம் மிச்சமாவதாலும் தங்களுக்கு இது போன்ற ரெடிமேட் இனிப்பு பலகார வகைகள் மிகவும் உதவியாக இருப்பதாக இல்லத்தரசிகள் அதிக அளவில் இந்த இனிப்பு பலகாரங்களை வாங்கிச் சென்று தீபாவளியை கொண்டாடி மகிழ தயாராகி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

variety cakes and sweet makes in mayiladuthurai iyangar bakery


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->