பெண்ணுக்கு செல்போனில் பாலியல் தொல்லை - கிராம அலுவலர் செய்த கொடூரச் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி அருகே நல்லாப்பாளையம் பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்தவர் சங்கீதா என்ற இளம்பெண் நேற்று தனது உறவினர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, 'எனது கணவர் அய்யனார், கடந்த 2014-ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். எனக்கு கமலேஷ் என்ற மகன் உள்ளான். எனது கணவரின் இறப்பு சான்றிதழ் வேண்டி கடந்த செப்டம்பர் மாதம் நான் எனது மாமியார் குப்புவுடன் கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டோம். அப்போது அவா் இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் கேட்டார். அத்துடன் எனது செல்போன் எண்ணையும் கேட்டு வாங்கினார்.

சில நாட்கள் கழித்து அவரிடம் ரூ.3 ஆயிரம் பணத்தைக் கொடுத்து இறப்பு சான்றிதழை பெற்றேன். அதன் பின்னர் அவர், என்னை செல்போனில் தொடர்புகொண்டு விதவை உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறினார். அதனை உண்மை என்று நம்பிய நானும் இ-சேவை மையத்தில் பதிவு செய்தேன். 

இதைத் தொடர்ந்து அவர், என்னை இரவு நேரத்தில் செல்போனில் தொடர்புகொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுபற்றி நான் எனது தம்பியிடம் கூறினேன். உடனே அவர், கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று தட்டிக்கேட்டதால் என்னுடைய விதவை உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை நிராகரித்து விட்டார். 

அவர், என்னிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து பேசியதை செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளேன். ஆகவே, இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்திருந்தார்.

அதன் படி விசாரணை மேற்கொண்ட விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஷாகுல் அமீது, நல்லாப்பாளையம் வி.ஏ.ஓ ஆரோக்கிய பாஸ்கர்ராஜை இன்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vao suspend for harassment in vilupuram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->