இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.!!
vao arrested for bribe in vilupuram
இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கெடார் அருகே டட் நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள். இவருடைய மாமனார் மாணிக்கம் மற்றும் கணவரின் சகோதரர் சவரி முத்து உள்ளிட்ட இருவரும் கடந்த 35 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர்.
இதனால் அன்னம்மாள், அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக அத்தியூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அரியலூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலராக உள்ள சங்கீதா மனுவிற்கு 500 ரூபாய் வீதம் ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வழங்க வேண்டும்.

அப்போது தான் ஆன்லைனில் விண்ணப்பித்து தருவேன் என்றுத் தெரிவித்துள்ளார். ஆனால், அன்னம்மாள் லஞ்சமாக பணம் கொடுத்து இறப்பு சான்றிதழ் பெற மனமில்லாமல், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகாரளித்துள்ளார்.
அந்த புகாரின் படி லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் கலந்த பணத்தை சங்கீதாவிடம் கொடுத்து வி.ஏ.ஓவிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அதன்படி, அன்னம்மாள் அந்த பணத்தை விஏஓ சங்கீதாவிடம் கொடுத்துள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சங்கீதாவை கையும், களவுமாக பிடித்து வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
vao arrested for bribe in vilupuram