தமிழ்ப்புதல்வன் திட்டம் மிகவும் நல்ல திட்டம்! முதல்வர் ஸ்டாலினுக்கு இன்பஅதிர்ச்சி குடுத்த வானதி சீனிவாசன்! - Seithipunal
Seithipunal


தமிழ்ப்புதல்வன் திட்டம் மிகவும் நல்ல திட்டம். இந்த பணத்தை வைத்து மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு பயன்படுத்தாமல் இருந்தால் சிறப்பான திட்டமாக இருக்கும் என கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நேற்று கோவை அரசு கல்லூரியில் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. தொடக்க விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் தெரிவித்ததாவது, தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றத்திற்காக முதலமைச்சர் ஸ்டாலின் என்னிடம் நன்றி தெரிவித்தார். கோவை விமான நிலையம் மற்றும் எனது தொகுதிக்குட்பட்ட டவுன் ஹால், காந்திபுரம் பகுதியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கொண்டுவரவேண்டும்.

அதுமட்டுமில்லாமல், தொகுதி சார்ந்த உள்கட்டமைப்பு பிரச்சனைகள் மற்றும் விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக பேசுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலினிடம் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். அவர்களும் வந்து பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

வருகின்ற 18ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்ப்புதல்வன் திட்டம் மிகவும் நல்ல திட்டம். இந்த பணத்தை வைத்து மாணவர்கள் போதை பழக்கத்திற்கு பயன்படுத்தாமல் இருந்தால் மிகவும் சிறப்பான திட்டமாக இருக்கும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vanathi Srinivasan is a very good project Tamilputulvan


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->