குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு ''சீல்''! எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்.!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்த 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

ஊத்தங்கரை போலீஸ் டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஊத்தங்கரையில் செயல்பட்ட புகையிலை விற்பனை கடைகளுக்கு சீல் வைத்தனர். 

அதன்படி ஊத்தங்கரையில் 6 கடைகள், கல்லாவியில் 8 கடைகள், சிங்காரப்பேட்டை 9, மத்தூர் 2, சாம்பல் பட்டியில் 1 என மொத்தம் 26 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

இதில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள் முத்துக்குமார், முத்து மாரியப்பன், ராஜசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் எஸ்.ஐ மற்றும் போலீசார் என பலரும் பங்கேற்றனர்.

மேலும் இது போன்ற குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uthangarai gutka sealed shops selling


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->