ஏ.ஆர்.ரகுமான் உடனான சந்திப்பு குறித்து விளக்கமளித்துள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன்..! - Seithipunal
Seithipunal


அண்மையில் டெல்லியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை நடிகை மீனா சந்தித்தது பேச்சுவார்த்தை நடத்தினர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அய்யர்கண்டிகையில் சந்தித்து பேசினார். 

தற்போது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் -மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இடையேயான சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் அய்யர்கண்டிகையில் பிரமாண்ட ஸ்டுடியோ ஒன்றை  கட்டியுள்ளார். இந்த ஸ்டுடியோவை நேரில் பார்வையிட வருமாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு ஏ.ஆர்.ரகுமான் அழைப்பு விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே எல்.முருகன் அங்கு சென்று பார்வையிட்டுள்ள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உலகளவில் சிறந்த தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய ஸ்டுடியோவை ஏ.ஆர்.ரகுமான் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் என்ற முறையில் நேரில் சென்று பார்த்தேன். இதில் அரசியல் இல்லை" என்று தெளிவு படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Minister LMurugan explains about the meeting with AR Rahman


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->