"என் பிள்ளைக்கு பால் கொடுக்கமாட்டியா"... தாய்ப்பால் கொடுக்காததால் சண்டை! கோபத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு.!
Unfortunate decision taken by husband in a fight because of not breastfeeding
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கணவன் மற்றும் மனைவிக்குமிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ் இவருக்கு திருமணமாகி சமீபத்தில் இவரது மனைவிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இந்நிலையில் சுரேஷின் மனைவி அவரது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் மாவு பால் கொடுத்து வந்திருக்கிறார்.

இது தொடர்பாக கணவன் மற்றும் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சுரேஷின் தாயாரும் இது தொடர்பாக அவரது மனைவியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் மாமியார் மற்றும் மருமகளிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த சுரேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாய்ப்பால் சண்டையில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Unfortunate decision taken by husband in a fight because of not breastfeeding