உதகை செல்கிறார் ராகுல் காந்தி!
Udhakai arrive Rahul Gandhi
ராகுல் காந்தி வருகையையொட்டி, கோவையில் பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி நாளை காலை 9:15 மணிக்கு புதுடெல்லியில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வருகிறார்.
கோவையில் இருந்து ராகுல் காந்தி காலை 11 மணிக்கு காரில் உதகை சென்று அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுக்க இருக்கிறார்.
பின்னர் மதிய உணவு முடிந்ததும், ஒரு மணி அளவில் உதகை அருகே உள்ள முத்தநாடு மந்து என்னும் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்குச் சென்று அவர்களோடு பேச இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கூடலூர் வழியாக வயநாடு செல்ல உள்ளார். இதற்கிடையே ராகுல் காந்தி முதுமலை யானைகள் முகாமுக்கு செல்ல உள்ளதாகவும் தகவல் தெரிய வந்தது.
ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடக்க உள்ளது.
மேலும் கோவையில் ராகுல் காந்தி வருகையினால் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Udhakai arrive Rahul Gandhi