தேனி : குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் - நீரில் மூழ்கி உயிரிழப்பு.!!
two school students died drowned water in theni
தேனி : குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் - நீரில் மூழ்கி உயிரிழப்பு.!!
தேனி மாவட்டத்தில் உள்ள சிவராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜன் மகன் சிவகாந்தன். இவரும், கண்ணாத்தாள் கோவில் தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் வீரராகவனும் தேனியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர்

இவர்கள் இருவரும் தேனி ரயில்வே நிலைய பகுதியில் சரக்குகளை ஏற்றி செல்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், குடோன் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் குளம்போல தேங்கியுள்ள நீரில் குளிக்கச் சென்றனர். நீண்ட நேரமாகியும் வெளியே சென்ற சிறுவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அவர்கள் செல்லும் இடங்களில் தேட ஆரம்பித்தனர்.
அப்போது, பள்ளத்தின் கரையில் சிறுவர்களின் சைக்கிள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆகவே, அவர்கள் குளத்தில் விழுந்திருப்பார்களோ என்று சந்தேகமடைந்து சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடியும் அவர்கள் உடல் கிடைக்காததால் மீண்டும் இன்று காலையில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்ற போது இரண்டு மாணவர்களும் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

இதைப்பார்த்த சிறுவர்களின் பெற்றோர்கள் கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து போலீசார் மீட்கப்பட்ட மாணவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
English Summary
two school students died drowned water in theni