கிருஷ்ணகிரியில் பரிதாபம் - தறிகெட்டு ஓடிய கார் -இருவர் பலி; 3 பேர் படுகாயம்.!
two peoples died and three peoples injured car accident in krishnagiri
கிருஷ்ணகிரியில் பரிதாபம் - தறிகெட்டு ஓடிய கார் -இருவர் பலி; 3 பேர் படுகாயம்.!
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தக் கார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருபரபள்ளி என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது.
அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிகெட்டு ஓடி முன்னால் சென்ற லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அடையாளம் தெரியாத அளவிற்கு நொறுங்கியது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு சென்ற ஐந்து பேரில் 2 பேர் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீதமுள்ள மூன்று பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
two peoples died and three peoples injured car accident in krishnagiri