மதுரையில் பரபரப்பு - ஜாமீனில் வெளிவந்த நபர் வெட்டிக் கொலை.!
two peoples arrested for young man murder in madurai
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் உள்ள தெருவில் இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சமயநல்லூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட நபர் மதுரை மாவட்டம் தத்தனேரி பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பது தெரியவந்தது.

மேலும், இவர் வாடிப்பட்டியில் பார் நடத்தி வந்ததும், அதற்கான உரிமம் ரத்தானதையடுத்து, பரவையில் உள்ள மார்க்கெட் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்று கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் மர்ம நபர்கள் அவரை இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் அப்பகுதியில் சுற்றிய இரண்டு நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், இருவரும் ராம்குமாரிடம் மது கேட்டதாகவும், அவர் பணம் கேட்கவே, இரண்டு நாட்கள் கழித்து தருவதாக கூறியதால், வாக்குவாதம் ஏற்பட்டு கத்தியால் சரமாரி வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two peoples arrested for young man murder in madurai