திருச்சியில் பயங்கரம் - நான்கு பேரை அரிவாளால் வெட்டிய தந்தை, மகன் - நடந்தது என்ன?
two peoples arrested for attack four peoples in trichy
திருச்சியில் பயங்கரம் - நான்கு பேரை அரிவாளால் வெட்டிய தந்தை, மகன் - நடந்தது என்ன?
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்தைச் சோந்தவா் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான தென்னை மரத்திலிருந்து விழும் மட்டைகள், பக்கத்துக்கு வீட்டுக்காரரான செல்வம் என்பவரது வீட்டில் விழுவதால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் செந்தில்குமாருக்கு சொந்தமான அந்த தென்னை மரத்தை சமீபத்தில் யாரோ வெட்டியுள்ளனர். அந்த மரத்தை செல்வம் தான் ஆள் வைத்து வெட்டி விட்டார் என்று சந்தேகப்பட்ட செந்தில்குமார் செல்வத்திடம் தகராறு செய்துள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த செல்வமும், அவருடைய மகன் தினேஷூம், செந்தில்குமாரின் தம்பி சிவக்குமார், அவரது அண்ணன், அண்ணி மற்றும் தாய் உள்ளிட்டோரை அரிவாளால் வெட்டியதோடு இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் படி விரைந்து வந்த அவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷை நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two peoples arrested for attack four peoples in trichy