பாதாள சாக்கடை சுத்தம் செய்த தொழிலாளர்கள் பலி - திருச்சியில் சோகம்.!!
two employees died for clean drinage in trichy
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே உள்ள கார்மல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் இன்று ஒப்பந்த தொழிலாளர்கள் ரவி, பிரபு ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது தொழிலாளர்கள் இருவரையும் விஷவாயு தாக்கியது. இதில் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
two employees died for clean drinage in trichy