அதிமுக நிர்வாகி கொலையில் திடீர் திருப்பம்!! யார் அந்த இருவர்? வெளியான திடுக்கிடும் தகவல்!! - Seithipunal
Seithipunal


சென்னை புறநகர் பகுதியான செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான ரவியின் மகன் அன்பரசு வேங்கடமங்கலம் ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினராக இருந்து வரும் நிலையில் கீழ்பாக்கம் அருகே துக்க நிகழ்வுக்காக சுடுகாட்டு பகுதியில் அவருடைய நண்பர்களுடன் காரில் சென்ற போது வழிமறித்த ஒரு கும்பல் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.

இந்த தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக காரில் இருந்த அன்பரசு மற்றும் அவருடைய நண்பர்கள் இறங்கி தப்பி ஓட விடாமல் துரத்திய கும்பல் அன்பரசுவை விரட்டிச் சென்று கை, கால், தலை கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக விட்டு தப்பி ஓடியது.  இதில் படுகாயம் அடைந்த அன்பரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

அன்பரசுவை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அதிமுகவினரும், அவருடைய உறவினர்களும் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கொலை குற்றவாளிகளை பிடிப்பதற்காக கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கேளம்பாக்கத்தை சேர்ந்த சுதர்சன் மற்றும் அவருடைய கூட்டாளி பாலாஜி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அன்பரசுவின் நண்பர் விஜிக்கும் கொலை குற்றவாளிகளுக்கும் ஏற்கனவே முன்பகை இருந்துள்ளது. 

சில நாட்களும் முன்பு தேவா என்பவர் கொலை வழக்கில் அன்பரசுவின் நண்பர் விஜிக்கு தொடர்பு இருந்ததால் இரு தரப்புக்கும் முன்பாக இருந்துள்ளது. இந்த முன்பகை விவகாரத்தில் அன்பரசு தலையிட்டு விஜிக்கு ஆதரவாக பேசியதால் அன்பரசுவை கொலை செய்திருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two arrested in AIADMK counselor murder case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->