ட்ரெண்டிங்கில் #WeNeedNorthTN #SmallisBeautiful..! தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், மாநில பிரிப்பு அவசியம்..!! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டும், மக்களின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை சமமாக உயர்த்தும் பொருட்டும் சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு 3 மாநிலமாக அதனை பிரிக்க வேண்டும், இவ்வாறு மாநிலங்களை பிரிப்பதால் தமிழக மக்களின் எதிர்கால பொருளாதார தேவைகள் மற்றும் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி பெருகும் என்று தெரிவித்து இருந்தார். 

இது தொடர்பான விஷயம் தற்போது வரவேற்பை பெற்று வருகிறது. ஏனெனில் சுதந்திரம் கிடைத்து கிட்டத்தட்ட 75 வருடங்கள் ஆகப்போகும் நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் தங்களுக்குள் தேவையான பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வளர்ச்சியை மேம்படுத்த இயலாத சூழலில் சிக்கி தவித்து வருகிறது. பெரும்பரப்பு கொண்ட மாநிலங்களை அந்தந்த மக்கள் தொகைக்கு ஏற்ப சிறிய மாநிலங்களாக பிரிக்கும் போது, அப்பகுதிக்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிகள் அதிகளவில் கிடைத்து, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் அதிகரிக்கும்.

 

அதனை கருத்தில் கொண்டு மருத்துவர் இராமதாஸ் வெளியிட்ட முகநூல் பதிவில், " தமிழ்நாட்டில் கூட சென்னை, கோவை ஆகியவற்றுக்கு இணையாக மதுரையில் தொழிற்சாலைகள் இல்லை என்பதால் தென் மாவட்டங்களை தனியாக பிரிக்க வேண்டும் என்று அங்குள்ளவர்களும், கொங்கு நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கொங்கு மண்டலத்தில் உள்ளவர்களும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது நினைவு கூறத்தக்கது " என்று தெரிவித்து இருந்தார். (மாநிலங்கள் பிரிப்பு தொடர்பான விபரத்தை படித்து உண்மையை புரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்).

இந்நிலையில், இன்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் #WeNeedNorthTN #SmallIsBeautiful என்ற ஹாஷ்டேக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பான பதிவுகளில், மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டியதற்கான காரணங்களும் கூறப்பட்டுள்ளது. 

அவையாவது, " சிறிய மாநிலமே சிறப்பானவை - அண்ணல் அம்பேத்கர்!, வட தமிழகம் வாடுகிறது தென் தமிழகம் தேய்கிறது ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு நிர்வாக வசதிக்கு மாநில பிரிப்பு ஒன்றேதீர்வு, பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் அல்லது பறையர்கள் இந்த தமிழகத்தை ஆள வேண்டும். இதற்கு ஒரே தீர்வு மாநில பிரிப்பு, வடதமிழக மக்களின் குமுரல்கள் என்னவென்று இந்த காணொளியில் காணலாம்! வட தமிழகத்தில் வளர்ச்சி இருந்திருந்தால் வடதமிழக பேச்சி அவசியம் இல்லை தான்!, இந்திய பாராளுமன்றத்தில் தமிழர்களுக்காக 2 மாநில உறுப்பினர்கள் குரல் கொடுக்கிறார்கள்.மாநிலம் பிரிந்தால் தமிழர்களுக்கான முக்கியத்துவம் 4 மாநிலமாக மாறும்.நமக்கான அதிகாரம் அதிகரிக்கப்படுமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை...., 

தமிழக அரசு வேலைகளில்  65% தென் தமிழகத்தினர் மட்டுமே இருக்கிறார்கள் அப்போ வட தமிழகத்தை சேர்ந்தோர் என் செய்வது?, இந்திய,தமிழக கிராமங்கள் என்பது ஒரு காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தது. இன்றைக்கு ஏன் அந்த வாழ்க்கை முறை இல்லை. இப்படித்தான் மாநிலங்களின் பிரிவினையும் உருவானது., ஒரே மாநிலத்திற்குள் சேர்ந்து வாழ விருப்பமற்ற அல்லது தங்களின் வாழ்க்கைப் பொருளாதாரத்தை கல்வி, வேலை வாய்ப்பில் உயர்த்த விரும்பும் இனம் தங்களுக்கு என்று தனி மாநிலம் கேட்டு போராடியது அல்லது தனி நாடு கேட்டு போராடியது. இப்பொழுதும் இது தான் நடக்கிறது., 

20 ஆண்டுகளில் 4 புதிய மாநிலங்கள் உதயமானது அவை ஜார்கண்ட்,சட்டீஸ்கர்,உத்ரகாண்ட்,தெலுங்கானா இவையெல்லாம் பிரிந்தபோது எதிர்ப்பும் ஆதரவும் சேர்ந்தே இருந்த்து.இப்ப அந்த மாநிலங்களை நிர்வகிக்க எளிமையாக உள்ளது. வரிசையில் தமிழகம் பிரிவது காலத்தின் தேவை., மாநில பிரிவினை மக்களை பிரிக்கிறது என்றால் மாவட்டங்களாக கூட பிரித்து இருக்க வேண்டாம்.எல்லோரும் ஒரே மாநிலமாக இருக்கலாம்,புதுச்சேரியையும் களைத்துவிடுங்கள்.(புதுச்சேரி தமிழ் தேசியம் பேசும் தம்பிகள் கூட ஏற்க மாட்டார்கள் என்பது திண்ணம்)., சம்யுக்த மகாராஷ்டிரா என்ற இயக்கத்தின் மூலம் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவே,மராத்தி மொழிக்கா-மகாராட்டிரம்,குஜராத்தி மொழிக்காக - குஜராத்  மாநிலங்கள் 1960 மே அன்று உருவாக்கப்பட்டது " என்று தங்களின் கோரிக்கையை பதிவு செய்து வருகின்றனர். 

யோசித்து பார்த்தால் மாநிலங்களின் பிரிப்பால் பிரிவினை வளரப்போவதில்லை, மாறாக பிரிக்கப்பட்ட மாநிலங்கள் வாயிலாக ஒருங்கிணைந்த தமிழகத்தின் வளர்ச்சி உயரத்தான் செய்யும். மக்களின் வாழ்க்கைத்தரமும் உயரும் என்பதே நிதர்சனம்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twitter Social Media Handlers about WeNeedNorthTN and smallisbeautiful Hashtag 25 April 2021


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal