நொடிக்கு நொடி பரபரப்பு; எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும்; ஆளுநரிடம் கடிதம் வழங்கிய டிடிவி தினகரன்..!
TTV Dhinakaran submits a letter to the Governor requesting that Edappadi Palaniswami be appointed as Chief Minister
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும், ஆட்சியமைக்க 118 தொகுதிகள் என்ற பெருபான்மை இல்லாத காரணத்தில் தவெக ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்தது.
காங்கிரஸ் கட்சி முன்னதாக ஆதரவு கொடுத்த நிலையில், தவெகவிற்கு சிபிஎம், சிபிஐ, ஆகிய காட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக கூறியுள்ளது. இதனால் தவெகவின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 116 ஆகா உயந்துள்ளது. ஆனுள் இன்னும் 02 சீட் தேவைப்படுகிறது.
முன்னதாக முஸ்லீம் லீக் கட்சி, ஆதரவு தெரிவிப்பதாக செய்திகழ் வெளியான நிலையில், பின்னர் அது வதந்தி எனவும், நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என உத்தியோகபூர்வமாக முஸ்லீம் கட்சி தெரிவித்துள்ளது. தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கின்ற நிலையில், அதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இருப்பினும் மாலை தவெக தலைவர் விஜய் லோக் பவனுக்கு சென்று ஆளுநரை சந்தித்து, தனது கட்சியின் பெரும்பான்மை ஆதரவு கடித்தை கொடுத்து, ஆட்சியமைப்பதற்கான கோரிக்கையை கடிதத்தை கொடுத்தார். ஆனாலும் ஆளுநர் தரப்பில் இருந்து இன்னும் அழைப்பு வரவில்லை.
இந்நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநர் மாளிகைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும், அதிமுகவை ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் வழங்கினார். தற்போது அடுத்த முதல்வர் விஜய்யா அல்லது எடப்பாடி பழனிசாமியா..? என்று வாக்களித்த மக்கள் பெரும் குழப்பத்தில் உறைந்து போய்யுள்ளமைதான் மிச்சம்.
English Summary
TTV Dhinakaran submits a letter to the Governor requesting that Edappadi Palaniswami be appointed as Chief Minister