மோடியா? ராகுலா? யாருடன் கூட்டணி! டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!
TTV Dhinakaran Say About 2024 Election Alliance
பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் கட்சியுடன், வருகின்ற மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைக்க உள்ளதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தெரிவிக்கையில், "வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் கட்சியுடன் தான் நாங்கள் கூட்டணி வைப்போம்.
அவ்வாறு வாய்ப்பு இல்லை என்றால், தனித்து போட்டுயிடுவோம். வருகின்ற ஜனவரி மாதம் எங்களுடைய கூட்டணி மற்றும் தேர்தல் நிலைப்பாட்டை நிச்சயமாக அறிவிப்போம்.

இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் எதையும் செய்யவில்லை" என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
மேலும், அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து டிடிவி தினகரன் தெரிவிக்கையில், "ஏற்கனவே அவர்கள் இரண்டு பேரும் கூட்டணியில் இருந்தார்கள். இப்போது கூட்டணியில் இல்லை. இதில் பார்ப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை.
அம்மாவைப் பற்றி பேசியபோதே அமைதியாக இருந்த அதிமுகவினர். அதன் பிறகு டெல்லிக்கு சென்று கூட்டணி பற்றி எல்லாம் பேசிவிட்டு, ஏமாற்றத்தோடு திரும்பி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
இப்போது பேரறிஞர் அண்ணாவைப் பற்றி பேசினார்கள். எனவே நாங்கள் கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று சொல்லி கொண்டு உள்ளார்கள். ஆனால் அதைத் தாண்டி வேற ஏதோ காரணம் இருக்கிறது என்று தான் தெரிகிறது" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
English Summary
TTV Dhinakaran Say About 2024 Election Alliance