பசும்பொன் மக்கள் கழக நிறுவனர் மறைவு - டிடிவி தினகரன் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


பசும்பொன் மக்கள் கழக நிறுவனர் ச.இசக்கிமுத்து இன்று உடல்நலக்குறைவால் இயற்கையை எய்தினார். இவரது மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ச. இசக்கி முத்துவின் மறைவுக்கு பலரும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பசும்பொன் மக்கள் கழக நிறுவனர் இசக்கிமுத்து மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ட்விட் பதிவில், " பசும்பொன் மக்கள் கழக நிறுவனர், அன்புச் சகோதரர் திரு.ச.இசக்கிமுத்து அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். 

பொதுவாழ்வில் தொடர்ந்து பணியாற்றி வந்ததோடு, அனைவரிடமும் நட்பு பாராட்டிய திரு.இசக்கிமுத்து அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinakaran regret to Pasumpon Makkal Kazhaga Founder 24 April 2021


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->