''விஜய் அமைதியாக தெரிகிறாரே தவிர மிகவும் நரித்தனமாக, ஹிட்லர் ஆட்சி நடத்தி வருகிறார்''; டிடிவி தினகரன் விமர்சனம்..!
TTV Dhinakaran criticizes TVK regime as Hitlers regime
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மூக்கையாத் தேவரின் 47-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய
டிடிவி தினகரன் தெரிவித்துள்ளதாவது;
தவெக ஆட்சி குறித்து சொல்ல வேண்டும் என்றால், சினிமா துறையிலிருந்து வந்துள்ளார்கள் என மக்கள் நம்பி வாக்களித்தார்கள். ஆனால், ஆரம்பத்திலேயே அதிமுக எம்எல்ஏ 25 பேரை நடுரோட்டில் நிறுத்தினார்கள் என்றும், வாக்குறுதிகளை தந்திரமாக நிறைவேற்றுவது மாதிரியும் இருக்க வேண்டும் என்றும், நிறைவேற்றாத மாதிரியும் இருக்க வேண்டும் என செயல்படுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அண்ணா காலத்தில் இளைஞர்கள் தான் மாற்றத்தை கொண்டு வந்தார்கள் என்றும், ஆனால், இங்கு யாருக்காவது அடிப்படை புரிதல் இருக்கிறதா? என கூட தெரியவில்லை என்று விமர்சித்துள்ளர்.
முதல்வருக்கு கூட எழுதி வைத்ததை கூட சரியாக பேச தெரியவில்லை என்றும், நிர்மல்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பேசுவது, திமுக, அதிமுக உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் பேசுவதை உதாசீன படுத்துவது போன்று இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஆட்சி அமைத்ததும் தில்லு முல்லு செய்து, பணம் தருகிறேன் என சொன்னதால் தான் மாற்றுக் கட்சியினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் 25 பேரை நடுரோட்டில் நிறுத்தி விட்டார்கள். இவர் அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள் என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
இந்த ஆட்சியை சொல்ல வேண்டுமென்றால் ஹிட்லர் ஆட்சி தான் நடக்கிறது என்றும், விஜய் அமைதியாக தெரிகிறாரே தவிர மிகவும் நரித்தனமாக, தந்திரமாக, செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும், மேலும், நாளை சட்டமன்றத்தில் அவரது பேச்சு சினிமா வசனம் போல தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
TTV Dhinakaran criticizes TVK regime as Hitlers regime