நொளம்பூரில் அதிர்ச்சி; ஓசி பீடி தராதததால் ஆத்திரம்; வடமாநில தொழிலாளி அடித்து கொலை: 4 பேர் வாலிபர்கள் கைது..!
A worker from the northern state was beaten to death in anger after the OC refused to give him a beedi in Nolampur
ஓசி பீடி கேட்டு தர மறுத்ததால் 04 பேர் கொண்ட கும்பல் ஒருவரை உருட்டுக் கட்டை மற்றும் இரும்பு கம்பியால் சரமாரி தாக்கி படுகொலை செய்துள்ள சமத்துவம் சென்னை அண்ணாநகர்- நொளம்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சமத்துவம் குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, இன்று காலை 04 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கட்டிட கூலித் தொழிலாளி அபிஜித் (54). இவர், சென்னை நொளம்பூர், கஜலட்சுமி நகர் பகுதியில் தங்கி, அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவன அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத் தினமாக நேற்றிரவு வேலை முடிந்து, அக்குடியிருப்பின் நுழைவுவாயிலில் நின்றபடி அபிஜித் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 04 பேர் கொண்ட கும்பல் வந்து, வடமாநிலத் தொழிலாளி அபிஜித்திடம் ஓசியில் பீடி கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.
ஆனால், அபிஜித் அந்த கும்பலுக்கு ஓசியில் பீடி தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமான குறித்த 04 பேரும் மதுபோதையில் வடமாநிலத் தொழிலாளி அபிஜித்தை உருட்டைக் கட்டை மற்றும் இரும்புக் கம்பியால் சரமாரி தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
குறித்த 04 பேர் கும்பலின் தாக்குதலில் படுகாயங்களுடன் அபிஜித் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்துள்ளார். அவரை சக நண்பர்கள் மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அபிஜித்தை அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நொளம்பூர் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அத்துடன், மர்ம நபர்களின் தாக்குதலில் இறந்துபோன அபிஜித்தின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இப்புகாரின்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, இன்று காலை வடமாநிலத் தொழிலாளியை மதுபோதையில் சரமாரி தாக்கி கொலை செய்த நொளம்பூர், கஜலட்சுமி நகரை சேர்ந்த கோகுல் (18), வசீகரன் (20), சபரி (19), அஜய் (18) ஆகிய 04 பேரையும் கைது செய்து, பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சமத்துவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A worker from the northern state was beaten to death in anger after the OC refused to give him a beedi in Nolampur