'லிவ்இன்' வாழ்க்கை; திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய நீட் மாணவர்; பெண்ணுக்கு தெரியாமல் கருக்கலைப்பு; ஆயுள் தண்டனை விதித்துள்ள உத்தரபிரதேச சிறப்பு நீதிமன்றம்..!
A special court in Uttar Pradesh has sentenced a NEET student to life imprisonment for raping a woman by tricking her into marrying her
உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் (24) ஒருவருக்கு, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அதன்பின்னர் அந்த இளைஞர் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். அத்துடன், இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை ஒரே வீட்டில் லிவ்இன் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.
இருவரும் கான்பூரில் வாடகைக்கு அறை எடுத்து 03 மாதங்கள் தங்கியுயள்ளார். வாலிபர் நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். அப்போது அந்தப்பெண் கர்ப்பமடைந்துள்ளார். உடனே அந்த வாலிபர், உடல் சோர்வை நீக்கும் மாத்திரை என்று பொய் கூறி அப்பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்து கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளார்.
பின்னர் அவரை திருமணம் செய்ய பெண் வற்புறுத்தியுள்ளார். ஆனால், பெண்ணின் சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்துள்ளதோடு, தனது பெற்றோருடன் சேர்ந்து சாதியைச் சொல்லி திட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி ஜஹாங்கிர்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு அம்பேத்கர் நகரில் உள்ள எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி சிந்தா ராம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அனைத்து சாட்சியங்களையும் விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.
English Summary
A special court in Uttar Pradesh has sentenced a NEET student to life imprisonment for raping a woman by tricking her into marrying her