அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை..! - Seithipunal
Seithipunal


அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று, சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, இடைத்தேர்தலில் துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 03வது இடத்திற்கு தள்ளப்பட்டது அக்கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படு தோல்வியால் கட்சிக்குள் மோதல்களும் வெடித்துள்ளன.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக, கட்சியில் அனைத்து மட்டத்திலும் உள்ள நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், ஏற்கனவே பொறுப்பில் உள்ள மாவட்ட செயலாளர்கள் என 84 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் கட்சியின் தலைமை நிர்வாகிகளும் பங்கேற்றனர். அதே நேரத்தில் இந்த கூட்டத்தில் எஸ்.பி.வேலு மணி, சி.வி.சண்முகம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்தும், விரைவில் நடைபெற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது பற்றி முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுகவை மீண்டும் வலிமையான இயக்கமாக மாற்றுவதற்கு மாவட்ட செயலாளர்கள் அனைவரும், கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் 06 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். விரைவில் இந்த தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மீண்டும் அதிமுகவை வெற்றிப்பெற வைத்து துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனவும் எடப்பாடி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi consultation with district secretaries at AIADMK headquarters


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->