கால்பந்து போட்டியில் நடக்கவிருக்கும் அதிசயம்; மெஸ்ஸி-ரொனால்டோ ஒரே அணியில் விளையாடவுள்ளார்களா..? 2026 டிசம்பரில் போட்டி நடத்த திட்டம்.!
Will Messi and Ronaldo play on the same team in a football match
கால்பந்து உலகின் முடிசூடா மன்னர்களாக வலம்வருபவர்கள் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்து கிரிக்கெட்டின் வரலாற்றில் தலைசிறந்த இந்த 02 வீரர்களுக்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். எப்போதும் எதிரெதிர் துருவமாகவே இவர்களது ரசிகர்கள் உள்ளனர்.
கால்பந்து தொழில்முறை வாழ்க்கை முழுவதும் எதிரெதிர் அணிகளுக்காகவே விளையாடிருக்கும் இவர்கள், ஒருமுறை கூட சேர்ந்து விளையாடியதில்லை.
அவர்களுடைய கால்பந்து வாழ்க்கையில் 978, 927 என கிட்டத்தட்ட 2000 கோல்களை அடித்திருக்கும் இந்த மாயாஜால வீரர்கள் ஒருமுறையாவது சேர்ந்து விளையாட மாட்டார்களா? சேர்ந்து விளையாடினால் எப்படி இருக்கும்? என உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் நினைக்காத நாட்களே இல்லை என்று சொல்லலாம்.

இருவரும் 36 முறை நேருக்கு நேர் மோதியிருக்கும் நிலையில் 22 கோல்கள், 21 கோல்கள் என சரிக்கு சமமாக மல்லுக்கட்டியுள்ளனர்.
இந்தசூழலில் தான் கால்பந்து விளையாட்டின் அதிசயமாக, மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் ஒரே அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் முன்னாள் சக வீரரான கார்லோஸ் டெவெஸ் தன்னுடைய கடைசி பிரியாவிடை போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது கடைசி தொழில்முறை ஆட்டத்தை விளையாடிய 42 வயதான டெவெஸ், தனது இளமைக்கால அர்ஜென்டினா கிளப்பான போகா ஜூனியர்ஸில் ஒரு பிரியாவிடை ஆட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

வரும் டிசம்பரில் சுமார் 60 தலைசிறந்த கால்பந்து வீரர்கள் கலந்துகொள்ளும் ஒரு பிரியாவிடைப் போட்டியை நடத்த திட்டமிட்டிருக்கும் டெவெஸ், அதில் மெஸ்ஸியையும் ரொனால்டோவையும் ஒன்றிணைப்போம் என்றும், நானே தனிப்பட்ட முறையில் சென்று ரொனால்டோவை அர்ஜெண்டினாவிற்கு அழைத்து வருவேன் என்றுகூறியுள்ளார்.
சர்வதேச அர்ஜெண்டினா அணியில் மெஸ்ஸியின் சகவீரராக விளையாடியிருக்கும் கார்லோஸ் டெவெஸ், 2007 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் ரொனால்டோ உடன் சகவீரராக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Will Messi and Ronaldo play on the same team in a football match