மனிதநேயமற்ற செயல்! தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!
TTV Dhinakaran Condemn to TNG for anakaputtur land issue
செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியற்டுவதற்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கநடனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில், "50 ஆண்டுகளுக்கு முன்பாகவே சாந்திநகர், தாய்மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு ஆகிய பகுதிகள் ஊராட்சி, நகராட்சி பட்டியலில் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவு எனக்கூறி அவர்களை வெளியேற்ற முயற்சிப்பது மனிதநேயமற்ற செயலாகும்.

நீதிமன்றத்தில் தகுந்த மேல்முறையீடு செய்து அனகாபுத்தூர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகள் நீர்வழித்தடம் மற்றும் நீர் தேங்கும் பகுதி இல்லை என்பதை தெளிவாக விளக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான தீர்ப்பை பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.
பலதலைமுறைகளாக வாழ்ந்து வருபவர்களை வெளியேற்றுவதை நிறுத்தி அங்கு வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்குவதோடு, வீடுகளை இழந்த ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் அரசு சார்பிலே புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்" என தமிழ்நாடு அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
TTV Dhinakaran Condemn to TNG for anakaputtur land issue