தீய சக்தி திமுகவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் காத்திருக்கின்றனர் - டிடிவி தினகரன்! - Seithipunal
Seithipunal


திருச்சியில் திமுக அமைச்சருக்கும், திமுக எம்பிக்கும் இடையேயான மோதல் முற்றி அடிதடி, ரவுடிசத்தில் முடிந்துள்ளது.

திருச்சியில் யார் அதிகாரமிக்கவர் என்ற போட்டியில் திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்கும், திமுக எம்பி திருச்சி சிவாவிற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்நிலையில், கே.என்.நேருவுக்கு திருச்சி சிவா ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டியாதல், ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடுமீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும், கே.என்.நேருவுக்கு கருப்புக் கொடிக் காட்டியவர்களை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்திருந்தபோது, காவல் நிலையத்தின் உள்ளே புகுந்து நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், "தீயசக்தி திமுகவின் ஆட்சி அமைந்து 2 ஆண்டு காலம் ஆவதற்கு உள்ளாகவே அக்கட்சியின் உட்கட்சி பூசலால் எழுந்துள்ள மோதலில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

'திருச்சியில் திமுக அமைச்சருக்கும், திமுக எம்பிக்கும் இடையேயான மோதலால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. 

ரவுடிகளைப் போல திமுகவினர் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து பெண் காவலரை தாக்கியதில் அவரது கை எலும்பு முறிந்து படுகாயம் அடைந்திருக்கிறார்.

திமுகவினரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். தீய சக்திகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தருணத்தை மக்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

இதில் சம்பந்தப்பட்ட அனைவரும், சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெறுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா?" என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinakaran Condemn For Trichy DMK Issue


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->