'ராகுல், பிரியங்கா தகுதியற்றவர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்கள்; தலைமை பொறுப்பில் இருந்து விலகவேண்டும்'; காங்கிரஸின் அஹமது படேல் மகன்..! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் மறைந்த குஜராத்தை சேர்ந்தவர் அஹமது படேல். முன்னாள் தலைவர் சோனியாவுக்கு நெருக்கமானவராகவும், அவரின் அரசியல் ஆலோசகராகவும் இருந்தவர். அத்துடன், கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் 25-இல் காலமானார். அவரது மகன் பைசல் அஹமது தலைமை மீது கொண்ட அதிருப்தி காரணமாக கட்சியில் இருந்து விலகியதோடு, வேறு கட்சியில் அவர் சேரவில்லை.

இந்நிலையில் பீஹாரில் ஏற்பட்ட சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: 

எதிர்க்கட்சிகளின் நோக்கங்களுக்கு இடையூறாக உள்ளதாலும், ஜனநாயகத்தை விரிவுபடுத்த மாற்றம் தேவை என்பதாலும் ராகுலும், பிரியங்காவும் கட்சியில் இருந்து ஒதுங்கிச் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இருவரும் தகுதியற்றவர்கள். அவர்கள் தோல்வியடைந்தவர்கள். எனவே அவர்கள் ஒதுங்க வேண்டும் என்றும்,  கட்சியின் தலைமை சசி தரூர் அல்லது உரிய தலைவர்களிடம் சேர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ராகுல், பிரியங்காவை விட அவர்கள் 25 மடங்கு திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் அளித்த பேட்டி ஒன்றில், கட்டுப்பாட்டை மீறிய ஆலோசகர்கள் தரும் கருத்துகளால் கட்சி பாதிப்படைகிறதாகவும்,  அனுபவம் வாய்ந்த மற்றும் நல்லெண்ணம் கொண்ட விசுவாசிகளை அந்நியப்படுத்தும் வகையில் அந்த ஆலோசகர்கள் ராகுல் மீது செல்வாக்கு செலுத்தி வருகின்றனர் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress Ahmed Patel's son says Rahul Priyanka should step down as incompetent and failed leaders


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->