ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகள் பட்டியல் வெளியீடு: இந்தியா முன்னேற்றம்..!
India advances in the list of powerful countries in Asia
ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியப் முப்படைகள் காட்டிய திறன் காரணமாக ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் (Asia Power Index -2025) இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு இந்தப்பட்டியலில் 38.5 புள்ளிகளை இந்தியா பெற்றிருந்த நிலையில், இந்தாண்டுக்கான பட்டியலில் 40 புள்ளிகளைப் பெற்ற இந்தியா, முக்கிய சக்திவாய்ந்த நாடாக மாறியுள்ளது.
குறித்த பட்டியலின் படி,
01-வது இடத்தில் அமெரிக்கா- (80.4 புள்ளிகள்),
02-2வது இடத்தில் சீனா- ( 73.5 புள்ளிகள்)
03-வது இடத்தில் இந்தியா- (40 புள்ளிகள்)
04-வது இடத்தில் ஜப்பான்.
05-வது இடத்தில் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.
06-வது இடத்துக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை நடத்திய லோவா நிறுவனம் தனது அறிக்கையில் மேலும், கூறியுள்ளதாவது:
''இந்தியாவின் ராணுவம் மற்றும் பொருளாதார திறன் இரண்டும் அதிகரித்துள்ளன. பொருளாதாரம் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதன் புவிசார் அரசியல் அடிப்படையில் இந்தியாவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ராணுவத்திறனும் மேம்பட்டுள்ளது.'' என்று இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
India advances in the list of powerful countries in Asia