'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவம்..!
Actor Rajinikanth honored with Lifetime Achievement Award
கோவாவில் 56- வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய விழா, இன்று (நவம்பர் 28) நிறைவு பெறுகிறது. இந்த விழாவில் சிறந்த நடிகர், நடிகைகள், படங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
அதன்படி, இன்று, முன்னணி திரை நட்சத்திரங்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 50 ஆண்டுகள் சினிமாவில் அவருடைய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விருதை பெற்றுக் கொண்ட ரஜினி இது குறித்து பேசும் போது கூறியதாவது:

தனக்கு விருது வழங்கி கௌரவித்த மத்திய அரசு மற்றும் கோவா அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், தன்னுடைய 50 ஆண்டு சினிமா பயணம் வேகமாக ஓடிவிட்டது என்றும் சினிமாவையும், நடிப்பையும் என்றும் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
அத்துடன், இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் நடிகராகவே பிறக்கவே விரும்புவதக்கவும், என்னை வாழ வைத்த மக்கள், திரைத்துறையினர், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி என்று விருது வென்ற ரஜினி பேசியுள்ளார்.
English Summary
Actor Rajinikanth honored with Lifetime Achievement Award