டிட்வா புயல் எதிரொலி: அண்ணாமலை பல்கலைக்கழகதின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைப்பு...!
Examinations of colleges operating under Annamalai University postponed due to Cyclone Titva
வங்கக்கடலில் உருவான 'டிட்வா புயல்' நமது அண்டைய தீவு நாடான இலங்கையை புரட்டி போட்டுள்ளது. நாபிக்கு முழுவது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டியுள்ளது. அந்நாட்டில் பெரும் மழை காரணமாக வெள்ளம் , சூறாவளிக்காற்று, மன்சரிவு போன்ற இயற்க்கை அனர்த்தத்தில் பலர் உயிரிழந்துள்ளதோடு, பலர் வீட்டு வாசலைகளை இழந்து நிர்க்கதி ஆகியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான 'டிட்வா புயல்' இன்று இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி புயல் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையொட்டி தமிழகத்தின் நாளை பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
English Summary
Examinations of colleges operating under Annamalai University postponed due to Cyclone Titva