திருப்பூர் | கம்பி நீட்டிய காதல் ஜோடியை சரமாரியாக தாக்கிய கூலிப்படை!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞனும், கோவில் வழி பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே, காதல் ஜோடி திடீரென மாயமாகி உள்ளனர்.

இதனை அடுத்து இளம் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளம்பெண் தேடி வந்த நிலையில், காதல் ஜோடி இருவரும் பல்லடம் அடுத்த அருள்புரத்தில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளிக்கவே, காதல் ஜோடியை நல்லூர் காவல் நிலையத்திற்கு போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போது, மூன்று கார்களில் விரட்டி வந்த ௧௦ பேர்கள், காதல் ஜோடியையும், நண்பர்களையும் சராசரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கள்ளிமேட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை கைது செய்துள்ளனர்.

மேலும் போலீசாரின் விசாரணையில் தாக்குதல் நடத்தியவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tripur Love issue Attack case


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->