'அப்பாவை காணோம்' தீவிரமாக தேடிய மகன்.. சற்று நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் முருகன் என்ற 52 வயது நபர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயகுமார் என்ற 26 வயது மகன் இருக்கின்றார். விஜயகுமார் லோடு மேனாக வேலை செய்து வருகிறார். 

முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அன்றாடம் அவர் மது அருந்திவிட்டு குடும்பத்தினரை ஆபாசமாக திட்டி வந்துள்ளார். அத்துடன் அடித்து புண்படுத்தி தகராறு செய்துள்ளார். நேற்று, இது போல முருகன் வீட்டில் தகராறு செய்தபோது விஜயகுமார் அவரை கண்டித்துள்ளார். 

இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் விஜயகுமார் ஆத்திரத்தின் உச்சியில் கத்தியை எடுத்து தந்தையை சரமாரியாக குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே முருகன் உயிரிழந்த நிலையில் திகைத்துப் போன விஜயகுமார் அருகில் இருந்த வாய்க்காலில் முருகனின் சடலத்தை கொண்டு சென்று போட்டார். 

இதனை தொடர்ந்து மறுநாள் காலை எதுவும் நடக்காதது போல தந்தையை காணவில்லை என்று விஜயக்குமார் தேடி அலைந்துள்ளார். தந்தை மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறி அவரது இறுதிச்சடங்கு இருக்கு ஏற்பாடு செய்தார். 

இந்த விஷயம் காவல்துறையினருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் விசாரணை நட த்தியதில் விஜயகுமார் தான் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார்  பிரேத பரிசோதனைக்காக முருகனின் உடலை அனுப்பி வைத்துவிட்டு விஜயகுமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trichy Thenkasi father killed by son


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->