பயணத்தின் போது நடந்த கொடூரம்… இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை...! - 63 வயது முதியவர் கைது
horrific incident during journey Young woman harassed 63 year old man arrested
திருவனந்தபுரத்தில் இருந்து சேலம் வழியாக சென்னை சென்டிரலுக்கு தினமும் இயக்கப்படும் திருவனந்தபுரம்–சென்னை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12624) நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு வழக்கம்போல் பயணத்தை தொடங்கியது.இந்த ரெயிலின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி ஒன்றில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் பயணம் செய்து வந்தார்.

சென்னை நகரில் உள்ள ஒரு முன்னணி ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர், பணிக்காக சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.ரெயில் சேலம் ரெயில் நிலையத்தை நெருங்கிய வேளையில், அதே பெட்டியில் பயணம் செய்த முதியவர் ஒருவர் அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக கூச்சலிட்டு உதவி கேட்டார்.சத்தம் கேட்டு அங்கு விரைந்த ரெயில்வே பாதுகாப்பு போலீசார், குற்றம் சாட்டப்பட்ட முதியவரை உடனடியாக பிடித்து, சேலம் ஜங்ஷன் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் திருவள்ளூரைச் சேர்ந்த அருளானந்தம் (63) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட குற்றத்திற்காக அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம், பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ரெயில் பாதுகாப்பு குறித்த கடுமையான கேள்விகளையும் எழுப்பி, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
horrific incident during journey Young woman harassed 63 year old man arrested