கோவையில் உதிரிபாகங்கள் விற்பனையகத்தில் திடீர் தீ விபத்து; குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேற்றம்..!
A sudden fire broke out at a spare parts shop in Coimbatore
கோவை மாவட்டம் காட்டூர் பகுதியில் உள்ள ராஜரத்தினம் தெருவில் குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள மூன்று அடுக்கு கட்டிடத்தில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் உள்ளது. இன்று இந்த விற்பனை நிலையத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து கட்டிடத்தில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட்டுள்ளது. ஆனால், தீய பற்றி எரிந்ததால், கட்டிடம் முழுவதும் தீ பரவிய அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் பொதுமக்களும் தீயை அணைக்க உதவி செய்துள்ளனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A sudden fire broke out at a spare parts shop in Coimbatore