நீயா? நானா? நடுவுல சட்ட ஒழுங்கு! அடித்து, உடைத்து அத்துமீறிய உடன்பிறப்புகள் தற்காலிக நீக்கம்! - Seithipunal
Seithipunal


திமுக எம்பி, திருச்சி சிவா வீட்டில் புகுந்த திமுக அமைச்சர் கேஎன் நேருவின் ஆதரவாளர்கள், கதவு, ஜன்னல், லைட், கார் கண்ணாடி, வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடிய கேஎன் நேருவின் ஆதரவாளர்கள், காவல் நிலையம் புகுந்தும் திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் பெண் காவலர் ஒருவரின் கை உடைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

தமிழகத்தில் ஏற்கனவே கொலை, கொள்ளை, கஞ்சா, ரவுடிசம், மாமூல் வசூல் என்று மக்கள் படத்தை பாடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் நிலையில், இப்படியான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும், சொந்த கட்சி எம்.பி., அமைச்சர், நிர்வாகிகளையே முதல்வராக இருக்கும் திமுக தலைவரால் கட்டுப்படுத்த முடியவில்லையே, எப்படி தமிழகத்தின் சட்ட ஒழுங்கை இவரால் காப்பாற்ற முடியும் என்ற விமர்சனத்தையும் எதிர்க்கட்சியினர் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக எம்.பி. திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 4 நிர்வாகிகளை தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பில், "திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச்செயலாளர் முத்துசெல்வம் உள்ளிட்ட 4 பேர் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கபடுகின்றனர்" என்று அந்த அறிவிப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Siva MP Home attack issue DMK Head action


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->