தண்ணீர் பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம்: புகாரளித்த பயணி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஊழியர்: வீடியோ வெளியாகி பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


ஹேம்குந்த் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரவில் விஷால் சர்மா என்ற நபர் பயணித்துள்ளார். அங்கு உணவு, மற்றும் தண்ணீர் பாட்டில்களை விற்கு ஊழியர் ஒருவர் இவரை தாக்கிய சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரெயில் ஊழியரான பவன் குமார் என்பவர் குழுவாக சென்று பயணி சர்மாவை தாக்கியுள்ளார். இதில் சர்மாவின் ஆடைகள் கிழிக்கப்பட்டுள்ளன. அதாவது, ரெயிலில் அங்கீகரிக்கப்பட்ட ரூ.15 மதிப்பிலான குடிநீர் பாட்டிலை ரூ.20-க்கு அந்த ஊழியர் விற்றுள்ளார்.

இதேபோன்று காபி மற்றும் நூடுல்சுக்கும் கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி செயலி வழியே பயணி சர்மா புகார் அளித்ததால் ஊழியர் ஆத்திரத்தில் அவரை தாக்கியுள்ளார்.

இதுபற்றி சர்மா தனது எக்ஸ் சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்திய ரெயில்வேயின் 03-ஆம் ஏ.சி. பெட்டியில் பயணிகளின் பாதுகாப்பு இது. வெட்கக்கேடு. ரெயிலில் தண்ணீர், உணவு வாங்கியதில் கூடுதல் கட்டணம் வசூலித்தது பற்றி புகார் அளித்ததற்கு என்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது என அவர் வீடியோவுடன் தெரிவித்துள்ளார். 

அத்துடன் அந்த வீடியோவில், பச்சை நிற சட்டை அணிந்த ஊழியர், சர்மாவை படுக்கையில் இருந்து கீழே வரும்படி கூறுகிறார்.ஆனால், அவரோ அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். கூடுதல் கட்டணம் பற்றி புகார் தெரிவித்தது தவிர, வேறெந்த தவறும் செய்யவில்லை என அவர் கூறுகிறார்.

அதனை தொடர்ந்து, அந்த ஊழியர் மேல் படுக்கைக்கு ஏறி, சர்மாவின் காலை பிடித்து இழுக்க, இதில், அவர் அதிர்ச்சி அடைவதுடன், வீடியோ துண்டிக்கப்படுகிறது. எனினும், வீடியோவின் தொடர்ச்சியாக, சர்மா காயங்களுடனும், கிழிந்த ஆடைகளுடனும் காணப்படுகிறார். இது குறித்து 04 நிமிடங்கள் ஓட கூடிய வீடியோ ஒன்றையும் சர்மா வெளியிட்டுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் குறித்த வீடியோ வைரலாகியுள்ளது. இதற்கு  பலரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய நிலையில்,  ஐ.ஆர்.சி.டி.சி. அமைப்பு அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அந்த குறிப்பிட்ட விற்பனையாளர் 05 ஆண்டுகளுக்கு பணிநீக்கம் செய்யப்பட்ட்டுள்ளதாகவும், கூடுதலாக 02 ஆண்டுகளுக்கு இந்த தடை நீட்டிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், இதேபோன்று  குறிப்பிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனத்திற்கு இந்திய ரெயில்வே நிர்வாகம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Employee commits murderous attack on passenger complained about extra charge for water bottle


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->