இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்: நாட்டில் பல்வேறு விமான நிலையங்கள் மூடல்..!
Various airports closed in India
கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 09 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்துள்ளது.

இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் இன்று திடீர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் இந்திய பாதுகாப்பு படைகளால் முறியடிக்கபட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்குமிடையே கிட்டத்தட்ட போர் உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீநகர், சண்டிகர், அம்ரித்சர், பாடியாலா, சிம்லா உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
English Summary
Various airports closed in India