கோவிலில் தாலியறுத்து ஒப்பாரி வைத்த திருநங்கைகள்.... வினோதத் திருவிழா.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநாவலூர் வட்டத்தில் அமைந்திருக்கக் கூடிய  கூவாகம் கிராமத்தில் திருநங்கைகள் வழிபடும் கூத்தாண்டவர் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் திருநங்கைகள் இங்கு வந்து கூத்தாண்டவரை வழிபட்டு அவருக்கு களப்பலி செய்வார்கள்.

இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழாவும், கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று அரவான் களப்பலி நிகழ்வு நடைபெறுவதை முன்னிட்டு திருநங்கைகள் முன்கூட்டியே சடங்குகளை துவங்கி விட்டனர்.

இந்த சடங்கின் ஒரு பகுதியாக திருநங்கைகள் தாலியறுத்து பொட்டு அழித்து  தாலியருக்கும் சம்பிரதாயங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அரவான் களப்பலிக்கு புறப்பட்ட பின்னர் பந்தலடியில் அமர்ந்து ஒப்பாரி வைத்தனர் திருநங்கைகள்.

அதன் பிறகு குளத்தில் குளித்து  வெள்ளை புடவை அணிந்து விதவை கோலத்தை திருநங்கைகள் கொண்டனர். மகாபாரதப் போரில் அரவான் களப்பலி கொடுப்பதை நினைவுபடுத்தும் வகையில் சித்திரை திருவிழாவின் 16 வது நாளான நேற்று அழு களம் நிகழ்ச்சி நடந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Transgender women perform for Chitrai Festival Field Sacrifice at Koothandavar Temple.


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->