பராமரிப்பு காரணமாக நாளை ரத்து செய்யப்படும் ரெயில்கள்...! - தெற்கு ரயில்வே
Trains cancelled tomorrow due to maintenance Southern Railway
தெற்கு ரெயில்வே,எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக செங்கல்பட்டு- கடற்கரை புறநகர் ரெயில் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும், செங்கல்பட்டு- கடற்கரை இடையே இயக்கப்படும் ரெயிலும், செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரெயிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
கூடுதலாக 'செங்கல்பட்டு- கடற்கரை இடையே புறநகர் ரெயில் ரத்து செய்யப்பட்டதற்கு பதிலாக சிறப்பு ரெயில் இயக்கப்படும்' என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதனால் பயணிகள் நேரம் அறிந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
English Summary
Trains cancelled tomorrow due to maintenance Southern Railway