திரைப்பட இடைவேளையில் விபரீதம்...! கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்தவருக்கு சிறை தண்டனை...!
tragedy during movie break man who harassed college student sentenced prison
ஈரோடு மாவட்டம் கோபியில் திரையரங்கில் திரைப்பட இடைவேளையின்போது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.கோபி பகுதியில் கடந்த 14.10.2023 அன்று திரையரங்கில் திரைப்படம் திரையிடப்பட்டுக் கொண்டிருந்தது.
இடைவேளையின்போது, அங்கு திரைப்படம் பார்க்க வந்த கல்லூரி மாணவியிடம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (27) என்பவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவலர்கள் விசாரணையை தொடங்கினர்.

விசாரணையின் முடிவில் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டு, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சி. சொர்ணகுமார் தீர்ப்பு வழங்கினார்.
வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிருஷ்ணகுமாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
திரையரங்கில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் கடுமையான சட்ட நடவடிக்கை தொடர்வதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
English Summary
tragedy during movie break man who harassed college student sentenced prison