கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பா...? மைதானத்தில் உயிரிழந்த வாலிபர்...! காரணம் என்ன...? - Seithipunal
Seithipunal


விழுப்புரம் அருகே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் மைதானத்திலேயே மயங்கி விழுந்த 40 வயது வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஜிஸ்கான் (40).

இவர் இன்று புதன்கிழமை தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு சென்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.விளையாட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அஜிஸ்கானுக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

வலி அதிகரித்த சிறிது நேரத்திலேயே அவர் மைதானத்தில் மயங்கி கீழே விழுந்தார்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்களும், அங்கிருந்தவர்களும் உடனடியாக அஜிஸ்கானை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உள்ளூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அஜிஸ்கான் உயிரிழந்த சம்பவம் சாலாமேடு பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அஜிஸ்கானின் திடீர் மரணம் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young man died field after suffering heart attack while playing cricket What reason


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->