செய்தியாளர்களிடம் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு!அண்ணாமலை இப்படி கேட்க சொன்னாரா? ''போயா''..சர்ச்சையை கிளப்பிய டி.ஆர்.பாலு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கடந்தகாலத்தில் “திமுக ஃபைல்ஸ்” என்ற பெயரில், திமுக அரசின் சில அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதன் தொடர்ச்சியாக, திமுக மக்களவை உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு, “எனது பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை பரப்பியுள்ளார்” என்று குற்றம்சாட்டி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், அண்ணாமலை கடந்த ஜூலை 17ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால் அன்றைய தினம் டி.ஆர். பாலு ஆஜராகாததால், விசாரணை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பேரில், இன்று (28ம் தேதி) டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

வழக்கு தொடர்பாக தனது தரப்பில் உள்ள ஆதாரங்களையும், விளக்கங்களையும் வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“அண்ணாமலை, 21 நிறுவனங்களுக்கும் எனக்கும் தொடர்பு உண்டு என்றார். ஆனால், அவற்றில் 18 நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் விளக்கமாகச் சொன்னேன். ஒன்றரை மணி நேரம் நேரில் ஆஜராகி சாட்சியமளித்தேன். வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்றார்.

அப்போது செய்தியாளர்கள், “2004ஆம் ஆண்டு நீங்கள் ஊழல் செய்ததால் 2009ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் பதவி தரப்படவில்லை. அதே விஷயத்தையே அண்ணாமலை கூறியிருக்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன?” என்று கேட்டனர்.

இதற்கு டி.ஆர். பாலு,“அண்ணாமலை உங்களுக்கு இப்படிக் கேட்கச் சொன்னாரா? அவர் கூறியிருந்தால், அதற்கு நான் சரியான இடத்தில் பதில் சொல்வேன்” என்று தெரிவித்தார். மேலும், “எந்த ‘இடியட்’ சொன்னதாக இருந்தாலும், நான் அண்ணாமலைக்கே பதில் சொல்வேன். நீங்கள் கேட்டதாக இல்லை” எனக் கூறினார்.

பின்னர், இன்னொரு செய்தியாளர், “10,000 கோடி உங்களுக்கு வந்து…” என்று கேள்வி தொடங்கியவுடன், டி.ஆர். பாலு கோபம் அடைந்து,
“விடுயா… போயா…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tr Balu speaks to reporters Did he ask Annamalai to listen like this Go away tr Balu sparks controversy


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->