மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
What announcement made by temple administration devotees Madurai Meenakshi Amman Temple
மதுரை மாவட்டத்திற்கு பெயர்போன 'மீனாட்சி அம்மன் கோவில்' தற்போது பக்தர்களுக்கு அந்த கோவில் நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டதாவது,"வருகிற 7-ந்தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை இரவு 9.57 மணிக்கு 'சந்திர கிரகணம்' ஆரம்பமாகி நள்ளிரவு 1.26 மணியளவில் முடிவடைகிறது.
ஆகையால் அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களில் அன்று மத்திம காலதீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம கால சுவாமி புறப்பாடு ஆகியவை பகல் 11.41 மணிக்கு நடைபெறும்.
அன்று மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது.ஆகையால் மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை.
ஆனால் அதற்கு மறுநாள் (8-ந்தேதி) வழக்கம் போல் சாமி தரிசனம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகையால் பக்தர்கள் விவரம் அறிந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
English Summary
What announcement made by temple administration devotees Madurai Meenakshi Amman Temple