நீலகிரியில் இரவுமுழுவதும் கொட்டி தீர்த்த கனமழை!வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது! மக்கள் அவதி! - Seithipunal
Seithipunal


நிலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை, அப்பகுதி வாழ்கையை சீர்குலையச் செய்தது.

கனமழையால் பந்தலூர், கூடலூரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின.பாடந்தொரை – அலவயல் பிரதான சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.கர்க்கார்பாலி செல்லும் சாலையிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் மெதுவாக சென்றன.

பல தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மக்கள் வாளி, குடம் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றினர். சிலர் வீடுகளை விட்டு உறவினர்களின் வீடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

கூடலூர் அருகே தேவாலா வாழவயல் பகுதியில் சுந்தரலிங்கம் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இதில் அவரது மனைவி சந்திரிகா (50) படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அதேபோல், அதே பகுதியில் முத்துலிங்கம் என்பவரின் வீடும் கனமழையில் இடிந்து விழுந்தது.

உப்பட்டி, பொன்னானி, நெலாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால், பந்தலூர் பஜாரில் வெள்ளம் தேங்கியது. இதனால் கூடலூர் – கோழிக்கோடு சென்று கொண்டிருந்த அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்து சென்றன.

ஊட்டியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழையுடன் கடும் குளிரும் பனிமூட்டமும் நிலவுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு, நீலகிரி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

பாதிப்பு ஏற்படக்கூடியதாக 283 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அவற்றை கண்காணிக்க 43 மண்ட குழுக்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளன.நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், மாவட்டத்தில் 3,600 முதல்நிலை பொறுப்பாளர்கள் மற்றும் 200 தன்னார்வலர்கள் எப்போதும் செயல்படத் தயாராக உள்ளனர். பொதுமக்கள், தங்கள் பகுதியில் பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக வருவாய்த் துறையினரை தொடர்பு கொண்டு, நிவாரண முகாம்களில் தங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy rains continued overnight in the Nilgiris Floods entered homes People are suffering


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->