களம்காவல் படத்தின் டீசர் வெளியீடு.!!
kalamkaval movie teaser released
திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்மூட்டி. இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் மற்றும் பசூக்கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மம்மூட்டி சில உடல்நிலை காரணங்களால் ஏழு மாத காலம் சிகிச்சையில் இருந்து சமீபத்தில் உடல்நிலை சரியாகி திரைத்துறைக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், மம்மூட்டியின் அடுத்த திரைப்படமான களம்காவல் படத்தை குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜித்தின் கே ஜோஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மம்மூட்டியும் இதுவரை பார்த்திராத கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் இசையை முஜீப் மஜீத் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ஒரு வில்லத்தனமான சிரிப்பு காட்சி இடம்பெற்றுள்ளது. படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
kalamkaval movie teaser released