சுதந்திரத்திற்கு பின்னர், ஹிந்து மக்கள் தொகை 15 சதவீதம் சரிவு, முஸ்லிம்கள் 85 சதவீதம் உயர்வு: சம்பல் வன்முறை விசாரணை குழு அறிக்கையில் அதிர்ச்சி..!
The report of the Sambhal violence inquiry committee is shocking stating that the Hindu population has declined by 15 percent
இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் ஹிந்து மக்கள் தொகை, 15 சதவீதம் சரிவை கண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024- சம்பல் வன்முறை குறித்த குழு அறிக்கையில் இதுதொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பல் வன்முறையை விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தேவேந்திர அரோரா தலைமையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஏ.கே. ஜெயின் மற்றும் அமித் பிரசாத் உறுப்பினர்களாக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இந்த விசாரணைக்குழு, தனது அறிக்கையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பித்துள்ளது.
சுமார், 450 பக்கங்களைக் கொண்ட இந்த ஆய்வறிக்கை கடந்த நவம்பர் 24, 2024 மோதல்களை மட்டுமல்ல, சம்பலில் நடந்த கலவரங்களின் வரலாறு, சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் வகுப்புவாத அரசியலின் பங்கு ஆகியவற்றையும் உள்ளடக்கி குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விசாரணைக்குழு அறிக்கையில் மேலும், கூறப்பட்டுள்ளதாவது:
1947 முதல் இப்பகுதியில் ஹிந்து மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சுதந்திரத்தின் போது, சம்பல் நகராட்சிப் பகுதியில் ஹிந்துக்கள் 45 சதவீதம் பேர் இருந்த நிலையில், தற்போது, அங்கு 15 லிருந்து 20 சதவீதமாக சரிந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், சுதந்திரத்தின் போது, 55 சதவீதமாக இருந்த முஸ்லிம்கள், தற்போது 85 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 1947 முதல் சம்பல் 15 கலவரங்களைக் கண்டுள்ளது, இதில் 1948, 1953, 1958, 1962, 1976, 1978, 1980, 1990, 1992, 1995, 2001 மற்றும் 2019 ஆகியவை அடங்கும்.
சம்பலில் ஒரு காலத்தில் 68 புனித யாத்திரைத் தலங்களும் 19 புனித கிணறுகளும் இருந்த நிலையில், தற்போது அவற்றில் பல காலப்போக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம் அவற்றை மீண்டும் கட்டமைப்பதற்கான திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
English Summary
The report of the Sambhal violence inquiry committee is shocking stating that the Hindu population has declined by 15 percent