கூலி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கோரிய மனு- உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு.!!
chennai high court dismiss ua certificate to collie movie case
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘கூலி’. இந்தத் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டதால் கூலி திரைப்படத்தை ‘யு/ஏ’ சான்றிதழுடன் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த நிலையில் கூலி திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதாவது, இந்தப் படத்தில் அதிக அளவிலான சண்டைக் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் மற்றும் மோசமான வார்த்தைகள் உள்ளதால், குழந்தைகள் பார்ப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
English Summary
chennai high court dismiss ua certificate to collie movie case